• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகுபலி உருவ சோப்பின் மூலம் கொரோனா விழிப்புணர்வு

March 24, 2020 தண்டோரா குழு

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மேலும் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் தாமாகவே தங்களை தூய்மையாக வைத்துக் கொண்டால் வைரஸ் தாக்குதலில் இருந்து பெருமளவு காத்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. வெளியே சென்று வரும் மக்கள் அனைவரும் கிருமி நாசினிகள் அல்லது சோப்பு கட்டிகளைக் கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யூ.எம்.டி.ராஜா மக்களிடையே மிகவும் பிரபலமான திரைப்பட கதாபாத்திரமான பாகுபலி உருவத்தை 20 சோப்புகளை கொண்டு உருவாக்கியுள்ளார். “பாகுபலியானாலும் ஆகும் பலி” மையக் கருத்தை முன்வைத்து இந்த உருவத்தை செய்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கிருமிநாசினிகள் போன்றவை கிடைக்கவில்லை என்று வேதனை கொள்ளாமல் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் சோப்பு கட்டிகளை கொண்டே கைகளை கழுவி நம்மை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் என்பதை மக்களிடையே உணர்த்தும் வகையில் இந்த உருவத்தை செய்துள்ளதாக தெரிவித்தார்.

கிருமிநாசினிகள் அதிக விலையில் விற்கப்படும் நிலையில் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் குளியல் சோப்புகள் குறைந்த விலையே என்றும் அதனைக் கொண்டு நம்மை நாமே தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க