July 6, 2018
தண்டோரா குழு
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஊழல் பணத்தில் லண்டனில் 4 குடியிருப்புகளை வாங்கியதாக அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் புகார் எழுந்தது. இதையடுத்து, அந்நாட்டு உச்சநீதிமன்றம்இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.
அக்குழு, விசாரணை நடத்தி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதனைத்தொடர்ந்து நடந்த விசாரணைக்கு பின் இவ்வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. அதன்படி நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மகள் மரியம் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கபட்டுள்ளது. தற்போது, நவாசும் அவரது குடும்பத்தினரும் லண்டனில் தங்கியுள்ளனர்.