• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தான் மீது இந்திய அணி மற்றொரு தாக்குதல் நடத்தி உள்ளது – அமித் ஷா

June 17, 2019 தண்டோரா குழு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய அணி வீழ்த்தி இருப்பதை சர்ஜிகல் தாக்குதலோடு ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் இந்திய அணியுடன் 7 முறையாக தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய அணி வீழ்த்தி இருப்பதை சர்ஜிகல் தாக்குதலோடு ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

பாகிஸ்தான் மீது இந்திய அணி மற்றொரு தாக்குதல் நடத்தி உள்ளது.அற்புதமாக செயல்பட்ட ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுவதாகவும், கொண்டாடுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க