• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தான் உளவாளியை மனித நேயத்தோடு நடத்தும் இந்தியா

April 11, 2017 தண்டோரா குழு

இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டவருக்கு பாகிஸ்தான் அரசு மரண தண்டனை விதித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் உளவாளியை போபால் அரசு மனித நேயத்தோடு நடத்தி வருகிறது.

இந்தியாவை சேர்ந்த குல்புஷன் ஜாதவ் என்பவருக்கு பாகிஸ்தான் அரசு மரண தண்டனையை விதித்துள்ளது. அவர் உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டு இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சஜீத் முனீர் என்பவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, விடுதலை ஆன பிறகும் போபால் காவல்துறையினர் தங்கள் சொந்த செலவில் அவரை நன்கு பராமரித்து வருகின்றனர்.

அவர் தற்போது போபாலில் உள்ள கோ ஈ பிஸா காவல் நிலையத்தில் உள்ளார். அவருடைய உணவு மற்றும் இதர பொருள்களை காவலர்களே வாங்கி தருகின்றனர்.

போபால் காவல்துறையினர் சஜீத்தை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று தலைமை அலுவலக அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் எந்த பயனும் இல்லை. இது குறித்து வெளிவிவகார அமைச்சகத்திற்கு நினைவூட்டு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க