• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க முழுமையாக தயார் – முப்படை அதிகாரிகள் கூட்டாக பேட்டி

February 28, 2019 தண்டோரா குழு

இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க முழுமையாக தயார் நிலையில் உள்ளன என முப்படை அதிகாரிகள் கூட்டாக பேட்டியளித்தனர்.

பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிக்கப்படுகிறார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். இருநாடுகளிலும் அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்க முடிவு எடுத்துள்ளதாகவும், வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படுவார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் முப்படை அதிகாரிகள் ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங் மெஹல், தல்பீர் சிங் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

விமானப்படை துணை மார்ஷல் ஆர்.ஜி.கபூர் கூறும்போது,

கடந்த 27-ம் தேதி காலை 10 மணியளவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான் எல்லையில் வந்தன என்றும் பாக் போர் விமானங்களை முறியடிக்க மிக் 21 மற்றும் மிராஜ் 2000 போர் விமானங்கள் சென்று, பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. தவறான பல தகவல்களை பாகிஸ்தான் அளித்துள்ளது. 2 இந்திய விமானிகளை கைது செய்ததாக பாக். பொய்கூறியது, ஆளில்லா இடங்களில் தான் தாக்குதல் நடத்தியதாக பாக் கூறியது, ஆனால் அவர்கள் இந்திய தளவாடங்களை குறிவைத்து தான் தாக்கியுள்ளனர். பாக். எஃப்-16 ரக விமானத்தை பயன்படுத்தவில்லை என்றும் கூறியது, ஆனால் அதை தான் நாம் சுட்டு வீழ்த்தினோம்.
இந்திய விமானப்படையின் மிக் 21 விமானம் மாயமானது. இந்திய விமானி பாராசூட்டில் பாக் எல்லைக்குள் குதித்தபோது அந்த நாட்டு ராணுவத்தால் பிடிபட்டார். பாகிஸ்தான் விமானப்படை குண்டுகள் வீசி தாக்கினாலும் இந்தியா தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இந்திய நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதுதான் முப்படை அதிகாரிகளின் நோக்கம் என்றார்.

தல்பீர் சிங் குஜ்ரால் நிருபர்களிடம் கூறுகையில்,

இந்திய கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மேலும், கடலுக்கு அடியிலும் இந்திய கடற்படை தயாராக உள்ளது. கடல் வழியாக பாகிஸ்தான் எந்த தாக்குதல் நடத்தினாலும் விரைந்து, பதிலடி தரப்படும்.நம் நாட்டு குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தான் எங்களது முதலாவது நோக்கம். இதற்காக நாங்கள் எது வேண்டுமானாலும் செய்வோம் என்றார்.

சுரேந்திர சிங் மஹல் கூறுகையில்,

முப்படைகளும் இந்திய மக்களை பாதுகாக்க முழு வீச்சில் தயாராக உள்ளன. இந்திய ராணுவம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி எல்லையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள நாங்கள் ரெடியாக உள்ளோம். அமைதி மற்றும் நிலைத்தன்மையே இந்திய ராணுவத்தின் விருப்பம் என்றார்.

மேலும், இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க முழுமையாக தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்த அவர்கள் பாகிஸ்தானின் எப் 16 விமானம் இந்தியாவில் தாக்குதல் நடத்தி தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான, ஆதாரங்களை வெளியிட்டனர். இதற்கிடையே, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் லாகூரில் இருந்து விமானம் மூலம் நாளை இந்தியா வருகிறார். டெல்லி அல்லது மும்பை விமான நிலையத்திற்கு அபிநந்தன் அழைத்து வரப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க