பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் புதன்கிழமை (பிப்ரவரி 8) ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவுகோலாகப் பதிவாகியுள்ளது.
இது குறித்து அமெரிக்க நாட்டின் புவியியல் ஆய்வு நிலைய அதிகாரி கூறியதாவது:
“பாகிஸ்தான் நாட்டின் அரேபிய கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள க்வாதார் துறைமுகத்திற்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பஸ்னி நகருக்கு இடையே மையம் கொண்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் துர்பாத் என்னும் நகரின் தென் பகுதி 9௦ கிலோமீட்டர் தூரத்தில் 1௦ கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இது ஆரம்பத்தில் 6.6 ரிக்டராக இருந்திருக்கும் என்று கருதப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பஸ்ன நாட்டின் மக்கள் தொகை 400,000 ஆகும். நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. 2௦13ம் ஆண்டு பலுசிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தில் 1,2௦௦ பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்