• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பவானி ஆற்றில் குளிக்க சென்ற 3 கல்லூரி மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்

October 31, 2022 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் அருகே மாம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் குளிக்க சென்ற மூன்று கல்லூரி மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் பத்து பேர் இன்று மேட்டுப்பாளையம் அருகே உள்ள வினோபாஜி நகர் மாம்பட்டி என்ற இடத்திற்கு பவானி ஆற்றில் குளிப்பதற்கு வந்துள்ளனர். பத்து பேரும் பவானி ஆற்றில் ஓரத்தில் உள்ள சிவகுமார் என்பவரது தோட்டத்தினுள் புகுந்து பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலையில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த பத்து மாணவர்களும் வெள்ளத்தில் சிக்கிகொண்டனர்.இதில் ஏழு பேர் மரக்கிளைகளையும் செடி கொடிகளை பற்றி தப்பினர்.இருப்பினும் சுரேந்திரன், கணீஸ்க்கர், ராஜதுரை ஆகிய மூன்று மாணவர்கள் பவானி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இதனையடுத்து இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்து செல்லபட்ட மாணவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க