• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“பவானியாற்றின் குறுக்கே தடுப்பணையை கேரளம் நிறுத்த வேண்டும்”

January 30, 2017 தண்டோரா குழு

பவானி ஆற்றின் குறிக்கே தடுப்பணை கட்டுவதைக் கேரள அரசு நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகளைக் கட்ட முனைந்துள்ளது. அங்குள்ள மலைவாழ் மக்களின் குடிநீர்த் தேவைக்காக இவ்வாறு தடுப்பணைகள் கட்டப்படுகின்றன என்று கேரள அரசு கூறி வருகிறது. இருந்தாலும், பவானி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி, தண்ணீரைத் தேக்குவதால் தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பவானி பாசன நிலங்களுக்குத் தண்ணீர் கிடைப்பதும், இம்மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையும் பாதிக்கப்படும்.

மேலும், காவிரி நதியின் துணை நதிகளாக உள்ள பவானி உள்பட ஆறுகளின் நீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு விசாரணையை பிப்ரவரி 24ந் தேதி முதல் அன்றாடம் நடத்த உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. விசாரணை முடிந்து விரைவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்படும். அதுவே இறுதியானது எனவும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் கூட காத்திராமல் கேரள அரசு முன்கூட்டியே தடுப்பணை கட்ட முனைந்துள்ளது. எனவே, கேரள அரசு முனைந்துள்ள தடுப்பணையைக் கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க