• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழைய ரயில் நிலைய போலீஸ் கட்டிடம் இடிக்கும் பணி தீவிரம்

January 22, 2022

கோவை ரயில் நிலைய வளாகத்தில் இருந்த சிறிய கட்டிடத்தில் ரயில்வே போலீஸ் நிலையம் இயங்கி வந்தது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர் அறை, சப்-இன்ஸ்பெக்டர்கள் அறை என குறைந்த எண்ணிக்கையில் அறைகள் இருந்தன.

மேலும் கட்டிடமும் மிகவும் பழமையாக காணப்பட்டது. இதனை அடுத்து கோவை ரயில்நிலைய மற்றொரு நுழைவு வாயில் பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடுதல் அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த புதிய கட்டிடத்திற்கு ரயில்வே போலீஸ் நிலையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டது.

இதையடுத்து பழைய ரயில்நிலையம் கட்டிடம் எவ்வித பயன்பாடும் இன்றி அப்படியே விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பழைய ரயில்வே போலீஸ் நிலையத்தை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்து அகற்றும் பணி நேற்று துவங்கியது.

மேலும் படிக்க