• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழம்பெரும் இயக்குநர் முக்தா வி.சீனிவாசன் காலமானார்

May 30, 2018 தண்டோரா குழு

பழம்பெரும் தயாரிப்பாளர்,இயக்குநர்,கதை,வசனகர்த்தா,எழுத்தாளர் முக்தா வி.சீனிவாசன்(88)சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில் அவர் உடல் நலக்குறைவால் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் நேற்று காலமானார்.

பொல்லாதவன்,சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட படங்களை இயக்கிய முக்தா சீனிவாசன் நாயகன், அந்தமான் காதலி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.முக்தா சீனிவாசன் தனது அண்ணன் முக்தா வி.ராமசாமியுடன் இணைந்து முக்தா பிலிம்ஸை துவக்கி அதன் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார்.இதுவரையிலும் மொத்தம் 65 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

அவரது மறைவு திரைத் துறையினரையும் அவரது குடும்பத்தாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1957-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘முதலாளி’ வெளி வந்தது.இந்த முதல் திரைப்படமே, ஜனாதிபதி விருதை பெற்றது.இவர் இயக்கிய சூரியகாந்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 100- வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க