• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழமை வாய்ந்த டெல்லி ரீகல் தியேட்டர் இன்று மூடப்படுகிறது

March 30, 2017 தண்டோரா குழு

டெல்லியில் 84 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரீகல் தியேட்டர் இன்று மூடப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் கன்னாட் பிளேசில் உள்ளது ரீகல் தியேட்டர். 1932முதல் டெல்லியின் முக்கிய அம்சமாக இந்த தியேட்டர் திகழ்ந்து வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த தியேட்டரில் ஒரு காலத்தில் ராஜ்கபூர், நர்கீஸ், அமிர்தாப் பச்சன், தர்மேந்திரா, ஹேமமாலினி போன்றோர் படம்பார்த்துள்ளனர்.

1950,60களில் இங்கு திரைப்படம் பார்த்த பிரதமர்கள்,குடியரசு தலைவர்கள்,மத்திய மந்திரிகள்,வெளிநாட்டு தூதர்கள் என பட்டியல் நீளும்.

கிட்டத்தட்ட தில்லியின் அடையாளமாகவே திகழ்ந்து வந்த ரீகல் தியேட்டர் இன்றுடன் மூடப்படுகின்றது.

இந்த திரை அரங்கத்தின் இன்றைய உரிமையாளர் விசால் சௌத்ரிகூறும்போது,

எங்களுடைய முன்னோர்கள் இந்த திரையரங்கை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கினர். இன்று நஷ்டத்தில் ஓடுவதால் பெருமைக்காகவோ, பிடிவாதத்திற்கோ இந்த திரையரங்கை நடத்த முடியவில்லை.

இந்த அரங்கத்தில் ஒரு காட்சிக்கு நாற்பது பேர் தான் வருகின்றனர்.

திரை அரங்கிறக்கான வரிகள்கூடகட்டமுடியவில்லைஆதலால் இந்த அரங்கை மூட முடிவுசெய்துள்ளோம் “என்று கூறினார்.

இன்று மாலையுடன் திரையரங்கம் மூடப்படுவதால் இன்று மாலை, மற்றும் இரவுக்காட்சியாக ராஜ்கபூரின் “மேரா நாம் ஜோக்கர்” படம் திரையிடப்படுகிறது. இந்த படத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஹவுஸ்புல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க