• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழனி யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம்

January 23, 2021 தண்டோரா குழு

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள புஸ்ஸி ஆனந்த் சமூக பணி சிறக்க வேண்டி கோவையில் விஜய் மக்கள் இயக்க குறிச்சி நகர இளைஞரணியினர் பழனி யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த புஸ்ஸி ஆனந்த் அண்மையில் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது பணி சிறக்க வேண்டி கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தின் குறிச்சி நகர இளைஞரணி சார்பாக பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச மளிகை பொருட்கள் வழங்கும் விழா கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள மதுரை வீரன் பட்டத்தரசியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி தலைவர் விஜய் யுவராஜ் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற இதில் குறிச்சி நகர இளைஞரணி தலைவர் ஃபைசல் தலைமை தாங்கினார்.செயலாளர் முகம்மது அலி,பொருளாளர் இரும்பு கடை அக்கீம்,அமைப்பாளர் சிவபாலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சுகுணா புரத்தை சேர்ந்த இந்தியன் வுட் வொர்க் குப்புராஜ் கலந்து கொண்டு பழனி மலைக்கு பாத யாத்திரை செய்யும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச மளிகை பொருட்களை வழங்கினார்.

இது குறித்து குறிச்சி நகர இளைஞரணி நிர்வாகிகள் பேசுகையில்,

விஜய் மக்கள் இயக்கத்தில் எங்களது தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தின் ஆக்கபூர்வமான பணி மேன்மேலும் சிறக்க இது போன்ற நல்ல செயல்களை செய்வதாகவும்,இனி இது போன்று பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் குறிச்சி நகர இளைஞரணி நிர்வாகிகள் சந்தோஷ் மெர்சல் செந்தில், மாஸ்டர் செந்தில், ரமேஷ் ரபீக், ஆசிக், ஹரிதாஸ், சலீம் குமார், ரியாஸ், ஆசிப், துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க