• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழங்குடி மற்றும் கிராம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி உதவும் ஈஷா!

December 19, 2021 தண்டோரா குழு

பழங்குடி மற்றும் கிராமப் பகுதிகளில் இருக்கும் பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஷா பவுண்டேஷன் கல்வி உதவித்தொகை வழங்கியது.

அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், தங்களது மேற்படிப்பைத் தொடர பொருளாதாரம் என்பது ஒரு தடையாகிவிடக்கூடாது என்பதற்காக, கடந்த சில ஆண்டுகளாக ஈஷா பவுண்டேஷன் அத்தகைய பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இதன் மூலம் பள்ளி கல்வியோடு நிற்காமல் அம்மாணவர்கள் மேற்கல்வியை தொடர்ந்து சிறந்த வேலைவாய்ப்பு பெரும் சுழல் உருவாகி வருகிறது.

குறிப்பாக கோவை அவினாசிலிங்கம் கல்லூரி, கற்பகம் கல்லூரி, கொங்குநாடு கல்லூரி, SNS கல்லூரி, கரூர் சாரதா நிகேதன் உள்ளிட்ட பல கல்லூரிகளில் மாணவர்கள் கல்வி பயில இந்த கல்வி உதவித்தொகை உதவுகிறது.

இந்தாண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி தொண்டாமுத்தூர் அருகேயுள்ள போளுவாம்பட்டி ஈஷா வித்யா பள்ளியில் நடைபெற்றது.ஞாயிற்றுக்கிழமை (19/12/2021) பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 மாணவ-மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்துகொண்டு தங்களுக்கான காசோலைகளை பெற்றுக்கொண்டனர்.

பெண்கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக, ஊக்கத்தொகை பெரும் மாணவர்களில் பெரும்பான்மையினர் மாணவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துதல், பழங்குடி மற்றும் கிராம அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தவிர்ப்பது உள்ளிட்ட கல்வி சார்ந்த பல பணிகளை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஈஷா அறக்கட்டளை செய்து வருவது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க