• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தரையில் அமர்ந்து தேர்வு எழுதிய வயது முதிர்ந்தோர்

April 7, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் நகரில் வயது முதிர்ந்தோர் 1௦ம் மற்றும் 12ம் வகுப்பிற்கான மாநில திறந்த தேர்வுகளை தரையில் அமர்ந்து எழுதியுள்ளனர். இந்த சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் நிம்பளா கிராம பஞ்சாயத்தை சேர்ந்த அகோரியா பகுதியை சேர்ந்த 62 வயது பூர் சிங். அவருக்கு நான்கு மகள்களும் இரண்டு மகனும் உள்ளனர். அவருடைய மகன் க்ஹுமன் கான் 8ம் வகுப்பிலும் மகள் சீதா 9ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து தனது 12ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார் சிங்.

இவரை விட வயதில் குறைந்த மாணவ மாணவிகளுடன் சமமாக அமர்ந்து தேர்வு எழுதுவதில் அவர் சிறிதும் வெட்கப்படவில்லை. குறைந்த அளவு கல்வியாவது ஒருவருக்கு இருக்க வேண்டும் என்ற செய்தியை மற்றவர்களுக்கு தெரிவித்தார்.

சிங்க் 1971ம் ஆண்டு 8ம் வகுப்பு தேர்வு எழுதினார். அதன் பிறகு, குடும்ப சூழ்நிலையால் தன்னுடைய படிப்பை நிறுத்திக்கொண்டார். குடும்பம் நல்ல நிலைக்கு முன்னேறிய பிறகு, தற்போது அவர் தன் பள்ளிப்படிப்பை தொடர்ந்துள்ளார். மாநில திறந்த தேர்வின் கீழ் தனது 1௦ம் வகுப்பு தேர்வை எழுத்தி 5௦% மதிப்பெண் பெற்றார். தற்போது அவர் தனது 12 வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

“கல்வி கற்றுக்கொள்ள வயது வரும்பு இல்லை. பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டவர்களுக்கு கல்வியை தொடர உதவி செய்து வருகிறேன்” என்று சிங் தெரிவித்தார்.பீன்யாத் பகுதியை சேர்ந்த துல்சாராம் புங்கர் மற்றும் அவருடைய மனைவி க்ஹெமி தேவி தங்களது 1௦ம் வகுப்பு அறிவியல் பாட தேர்வை எழுதியுள்ளனர்.

“8 ஆண்டுகளுக்கு முன், பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டேன். என் மனைவியும் நானும் ஒன்றாக படிப்பதாக சபதம் எடுத்துக்கொண்டேன்” என்று துல்சாராம் தெரிவித்தார்.சிங்க், துல்சாராமை அடுத்து தேரசர் சர்பன்ச் பச்சு கான், அவருடைய நண்பர்கள் இஷாக் கான், ரோஷன் கான் ஆகியோர் தங்களது 1௦ம் வகுப்பு தேர்வை எழுதவுள்ளனர். இளையவர்களோடு தாங்களும் தேர்வு எழுதுவதை பெருமையாக நினைக்கின்றனர்.

மேலும் படிக்க