• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி சிறுவர்களை வைத்து தன் காரை சுத்தம் செய்த ஆசிரியை பணியிடை நீக்கம்

December 8, 2018 தண்டோரா குழு

உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளி சிறுவர்களை வைத்து தனது காரை சுத்தம் செய்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிப்ரவுலி பகுதியில் வசிப்பவர் கரிமா ஷரீப் அதே பகுதியில் உள்ள கபர்வா தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆசிரியை கரிமா பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து தனது காரை சுத்தம் செய்துள்ளார். மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ இணையதளங்களில் வெளியானது. அந்த வீடியோ வில் காரின் பதிவெண் உள்பட அனைத்தும் தெளிவாக பதிவானது. இதுகுறித்து காரின் பதிவெண் வைத்து அதிகாரிகள் விசாரிக்க தொடங்கினர்.

இதுதொடர்பாக ஆசிரியை கரிமா பக்கத்து வீட்டுக்காரிடம் விசாரித்தபோது இது ஒருமுறையல்ல பெரும்பாலும் பள்ளி சிறுவர்கள் தான் ஆசிரியையின் காரை சுத்தம் செய்வதாக தெரிவித்தார். பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆசிரியையின் மீது தவறு இருப்பது உறுதியானது. மேலும் விசாரணையில் மற்றொரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியையின் வீட்டில் சமைக்கும் புகைப்படங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தவிர்க்கும் வகையில் தாமதமாக வரும் ஆசிரியர்களின் சம்பளத்தை பிடிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க