• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி கட்டிடம் இடிந்தது : 20 பேர் சிக்கியுள்ளதாக தகவல்

April 13, 2017 தண்டோரா குழு

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கோரந்தாங்களில் புதிதாக பள்ளி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.இங்கு கட்டிடப் பணி இன்றும் நடைபெற்று வந்தது.இந்நிலையில், கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது 20 பேர் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இது குறித்து அருகில் உள்ள தீயணைப்பு துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி கட்டிட விபத்தில் சிக்கிய 3 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க