June 9, 2021
தண்டோரா குழு
பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக பார்வையற்றோர் இன்னிசை குழுவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர்களுக்கு தொடர்ந்து 25 நாட்களாக உணவுடன் அரிசி, மளிகை,சமையல் எண்ணெய்காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தொழில் நகரமான கோவையில் தொழிலாளர்கள் மற்றும் தெருவோரங்களில் வசிப்பவர்கள் உணவில்லாமல் அவதி பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் இவ்வாறு உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு தினமும் சிக்கன் பிரியாணி,முட்டை பிரியாணி போன்ற அசைவ உணவு வகைகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இது போன்று வருமானமில்லாமல் தவிப்பவர்களை தேடி சென்று உதவி வரும் இவர்,கோவை,போத்தனூர் மேட்டூர் பகுதியில் வசித்து வரும் பார்வையற்றோர் இன்னிசை குழுவை சேர்ந்த சுமார் ஐம்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு தேவையான உணவை கடந்த 25 நாட்களாக வழங்கி வருகிறார். இது மட்டுமில்லாமல் அவர்களுக்கு தேவையான மளிகை,காய்கறிகள்,அரிசி போன்றவற்றை வரும் இவரின், சமூக பணியை, பொதுமக்கள்,ஏழை தொழிலாளர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் முழு ஊரடங்கால் இது போன்று தன்னார்வலர்கள் பலரும் சமூக பணி செய்ய களத்தில் இருந்த போதும், பெரும்பாலும் உதவி கிடைத்தவர்களுக்கே போய் சேர்வதால்,மேலே குறிப்பிட்ட போத்தனூர் மேட்டூர் பகுதியில் வசிக்கும் பார்வையற்றோர் இன்னிசை குழுவினர்,மேலும் இது போன்று முகம் தெரியாமல் உதவிகள் தங்களுக்கு கிடைக்காத என ஏங்குபவர்களை கண்டறிந்து உதவிகள் செய்தால் முழுமையான பலனாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.