• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல்கலை. பாரபட்சம் காரணமாக தமிழக மாணவர் தில்லியில் தற்கொலை?

March 14, 2017 தண்டோரா குழு

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடம் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் அவரது நண்பர்கள் இல்லத்தில் திங்கட்கிழமை மர்ம மான முறையில் இறந்துகிடந்தார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் எம்.ஃபில். மேற்படிப்புக்காக தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் கடந்த ஆண்டு சேர்ந்தார். அங்கு அவர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் தனது நண்பர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு முத்துகிருஷ்ணன் திங்கள்கிழமை சென்றுள்ளார். அங்கு சிறிது நேரம் நண்பர்களுடன் பேசிவிட்டு, தனி அறைக்குச் சென்றதாகவும் பிறகு வெகு நேரம் ஆகியும் அவரது அறைக் கதவு திறக்காததால் இருந்தது. சந்தேகம் அடைந்த நண்பர்கள் கதவைத் திறந்து பார்த்த போது அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே அவரது ஃபேஸ்புக் பதிவில் ஞாயிற்றுக் கிழமை பதிவிட்டுள்ளதாவது, “பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பிஹெச்.டி. மாணவர்களில் சிலர் பாரபட்சத்துடன் நடத்தப்படுகின்றனர். இந்தப் படிப்புகளின் சேர்க்கைகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது; வாய்மொழித் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்படுகிறது” என்று அதில் முத்துகிருஷ்ணன் கூறியுள்ளார்.

முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து தில்லி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் விரக்தியில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க