• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பறவைகளை காக்க குமரி முதல் காஷ்மீர் வரை பிரம்மரிஷி மோட்டார் சைக்கிள் பேரணி

March 19, 2022 தண்டோரா குழு

அழிந்து வரும் பறவை இனங்களை காக்க வலியுறுத்தி கோவையை சேர்ந்த பிரம்மரிஷி ஈஸ்வரன் குருஜி குமரி முதல் காஷ்மீர் வரை இருசக்கர விழிப்புணர்வு யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தா கல்பா பவுண்டேசன் நிறுவன தலைவரும் ஸ்ரீ ஆனந்த வேதாஸ்ரமத்தின் பிரம்மரிஷியும் ஆன ஈஸ்வரன் குருஜி அழிந்து வரும் பறவை இனங்களை காக்க வலியுறுத்தி ஸேவ் பேர்ட்ஸ் யுவர் செல்ப் ( SAVE BIRDS YOUR SELF) எனும் தலைப்பில் குமரியில் துவங்கி காஷ்மீர் வரை சுமார் 4000 கிலோ மீட்டர் இரு சக்கர பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர்,

வரும் 21 ஆம் தேதி கன்னியாகுமரியில் பயணம் துவங்க உள்ளதாகவும்,முன்னதாக, உலக சிட்டு குருவி தினத்தில், நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்குச் சென்று, அந்த கிராமத்தை பறவைகள் பாதுகாப்பிற்கான முன்மாதிரி கிராமமாக அறிவித்து, கிராம மக்களையும் கவுரவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்,மண்வளம், மரங்களை பாதுகாப்பது போன்றவகளை காட்டிலும் மனித குலம் பறவைகளை அழியாமல் பாதுகாப்பதே தற்போதைய முக்கிய பணியாக செய்ய வேண்டும் என குறிப்பிட்ட அவர்,உலகின் முதல் விவசாயி பறவைகள் தான் என தெரிவித்தார்.

எனவே நமது பூமியை மீண்டும் பசுமையாக மாற்றும் ஒரே நம்பிக்கை பறவைகள்தான் என்பதை வலியுறுத்தும் விதமாக, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிள் பேரணியாக தாம் இந்த விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க