• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பறக்கும் விமானத்தில் பணிப்பெண் உடல்நலம் பாதிப்பு, கைகொடுத்தார் இந்திய டாக்டர்

March 7, 2017 தண்டோரா குழு

ஒருவருக்கு உடல் சுகமில்லை என்றால் அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். வாகனங்களில் பயணம் செய்யும்போது, உடல் நலம் குன்றினால், மருந்துக் கடையிலிருந்து மருந்து வாங்கிக்கொள்ளலாம் அல்லது செல்லும் வழியில் மருத்துவர்கள் யாராவது இருந்தால், அவர்களைப் பார்க்கலாம்.

விமானத்தில் பயணம் செய்யும்போது, கேட்கவிரும்பாத சில கேள்விகளில் ஒன்று, “விமானத்தில் மருத்துவர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்பது தான்.

ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறக்கும்போது, மருத்துவ அவசரம் ஏற்படும் அனுபவத்தை நினைப்பது பயத்தை உண்டாக்கும். உங்களுடன் விமானத்தில் பயணிக்கு மருத்துவர் ஒருவர் பயணம் செய்து, உங்கள் உயிருக்கு ஆபத்து நேரும்போது உதவுவது எத்தனை அற்புதம்.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்திலிருந்து மலேசியா நாட்டின் கோலாலம்பூர் நகருக்கு “எம்எச் 130” என்னும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் பயணமானது. அந்த விமானத்தில் டாக்டர் அஞ்சிதா பண்டோவும் அவரது கணவர் சவுரப் குமாரும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

திடீரென்று விமானத்தின் உள்ளே ஏதோ லேசான பரபரப்பை அஞ்சிதா பாண்டோ உணர்ந்தார்.

சிலர் சத்தம் எழுப்புவதை அவரும் கணவரும் கேட்டனர். விமானப் பணிப்பெண் தன் கையில் ஆக்ஸிஜன் சிலிண்டரைத் தூக்கிக் கொண்டு விமானத்தின் முன் பகுதிக்கு அவசரமாக ஓட்டுவதைத் கண்டார்கள். இது ஒரு மருத்துவ அவசரம் என்று அவர்கள் உணர்ந்தனர்.

அப்போது, விமான ஓட்டுநர், “விமானத்தில் மருத்துவர்கள் யாராவது இருக்கிறீர்களா? என்று அறிவிப்பு விடுத்தார்.

இதை சவுரப் குமார் தனது ஃபேஸ் புக்கில் விவரிக்கிறார்:

“11 மணி நேர பயணம் செய்யும் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், எங்களுக்கு முன் குழப்பமான சூழ்நிலை உருவானது. சிறிது நேரத்தில், எங்களுடைய சந்தேகம் உறுதி செய்யப்பட்டது. அந்த அறிவிப்புக்கு என் மனைவி உடனடியாகப் பதிலளித்தாள். நாங்கள் முன் பகுதிக்கு சென்றபோது, ஒரு விமானப் பெண்மணி மயங்கி கிடந்ததையும், மற்ற விமான ஊழியர்கள் அந்த பெண்மணிக்கு உதவி செய்வதையும் கண்டோம்.

சூழ்நிலையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் அஞ்சிதா. விமானத்திலிருந்த மருத்துவ உபகரணங்களை விமான ஊழியர்கள் அவளுக்குக் கொடுத்தனர்.

ஒரு வேளை என் மனைவியின் சிகிச்சைக்குப் போதிய பலன் இல்லாவிட்டால், விமானத்தை உடனே தரையிறக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் தரையிறங்க இரண்டு மணி நேரமும் ஆக்லாந்துக்குத் திரும்ப ஒரு மணி நேரம் ஆகுமே என்று எனக்கு கவலையளித்தது.

அஞ்சிதா எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக அந்த விமானப் பணிப்பெண் கண் விழித்தாள். அதைப் பார்த்த மற்ற பயணிகள் கரம் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நாங்கள் எங்களுடைய இருக்கைக்குத் திரும்பிய பிறகு, விமானி என் மனைவியை மனமாரப் பாராட்டினார். என் மனைவியைக் கண்டு பெருமையாக இருக்கிறது”

இவ்வாறு அவர் எழுதியிருந்தார்.

மேலும் படிக்க