• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பர்தா அணிய வேண்டும் என்கிற நிபந்தனையால் செஸ் போட்டியிலிருந்து விலகிய இந்திய வீராங்கனை!

June 13, 2018 தண்டோரா குழு

ஈரானில் நடைபெற உள்ள ஆசிய செஸ் போட்டியில்முகத்தை மூடும் உடையை அணிய வேண்டும் என்கிற ஈரான் அரசின் நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் உலக ஜூனியர் செஸ் சாம்பியன் சவுமியா சுவாமிநாதன் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

ஈரான் நாட்டின் ஹமதான் நகரில் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 4-ம் தேதி வரை ஆசிய நாடுகள் கலந்துக்கொள்ளும் செஸ் போட்டி நடைபெறவுள்ளது.இதற்கடையில்,இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில்,ஈரானிலும் விளையாட்டு போட்டியில் கலந்துக்கொள்ள வீராங்கனைகளுக்கு ஆடை கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,இந்த ஆடை கட்டுப்பாட்டிற்குஉடன்பட இந்திய வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் மறுப்பு தெரிவித்து போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு உள்ள செய்தியில்,

“கட்டாயமாக தலையில் முக்காடு அணிய வேண்டும் அல்லது புர்கா அணிய வேண்டும் என்பதை நான் விரும்பவில்லை.கட்டாயமாக தலையில் முக்காடு அணிய வேண்டும் என ஈரானிய சட்டம் உத்தரவிடுவது கருத்து சுதந்திரம்,சிந்தனை சுதந்திரம்,மனசாட்சி மற்றும் மதம் உள்பட என்னுடைய அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது.இப்போதைய சூழ்நிலையில் என்னுடைய உரிமையை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி நான் ஈரானுக்கு செல்லாமல் இருப்பது ஒன்று தான்,” என்று கூறியுள்ளார்.

இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க செஸ் சாம்பியன் நாஸி பைய்கிடே பர்னஸ் தெக்ரானில் நடைபெற இருந்த போட்டியில் தலையில் முக்காடு அணிய மறுத்து போட்டியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க