• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பருத்தி மற்றும் கழிவுப்பஞ்சு மீதான இறக்குமதி வரியை நீக்க சைமா கோரிக்கை

January 7, 2022 தண்டோரா குழு

இந்திய பருத்தியின் விலை சர்வதேச பருத்தியின் விலையைக்காட்டிலும் அதிகரிப்பு. பருத்தி மற்றும் கழிவுப்பஞ்சு மீதான இறக்குமதி வரியை நீக்க சைமா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சைமா தலைவர் ரவிசாம் கூறியிருப்பதாவது:

பருத்தி விலை உயர்வு ஜவுளித் துறையை மிகவும் பாதிக்க செய்துள்ளது. இந்தியாவில் தற்போது சீசன் தொடக்கத்திலேயே பருத்தியின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி குவிண்டாலுக்கு ரூ.6,788 என இருந்த குஜராத் சங்கர்-6 பருத்தி விலை தற்போது ரூ.8,930-ஆக அதிகரித்துள்ளது. நல்ல தரமான சங்கர்-6 பருத்தி விலை ரூ.7,575-லிருந்து ரூ.10,760 ஆக அதிகரித்துள்ளது.

எப்போதும் இந்திய பருத்தி விலையைக் காட்டிலும் சர்வதேச பருத்தியின் விலை அதிகமாகவே இருக்கும். ஆனால் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் விதிக்கப்பட்ட 11 சதவீத இறக்குமதி வரி காரணமாக வரலாற்றில் முதன்முறையாக இந்திய பருத்தியின் விலை சர்வதேச பருத்தியின் விலையைக்காட்டிலும் அதிகரித்து, நமது ஜவுளித் துறையின் சர்வதேச போட்டித் திறனை பாதித்துள்ளது.

பொதுவாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்தியாவுக்கு உறுதியாகக்கூடிய ஏற்றுமதி ஆர்டர்கள், பருத்தி விலை உயர்வால் தற்போது இந்திய ஏற்றுமதியாளர்களால் உறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளதால், போட்டி நாடுகளுக்கு ஆர்டர்கள் செல்லத் தொடங்கி விட்டன.பருத்தியின் விலை மேலும் உயரும் எனக் கருதுவதால் விவசாயிகளும் பருத்தியை சந்தைக்கு கொண்டு வருவதில்லை. இதனால் சந்தையில் தரமான பருத்தி கிடைப்பதில்லை. கிடைத்தாலும் கூடுதல் விலை அளிக்க வேண்டியுள்ளது.

பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு பருத்தி மற்றும் கழிவுப்பஞ்சு மீதான இறக்குமதி வரியை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையெனில் ஒட்டுமொத்த ஜவுளித் துறையின் இயக்கம் வரும் மாதங்களில் நின்று விடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க