• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பராமரிப்பு பணி: தியானலிங்கம், ஆதியோகி மே 30-ஆம் தேதி மூடப்படும்

May 29, 2023 தண்டோரா குழு

ஈஷாவில் வரும் மே 30-ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும். எனவே, அன்றைய தினம் பக்தர்கள் ஈஷாவிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக,தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர்

இந்நிலையில்,ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்பு பணிக்காக ஈஷா வளாகம் வரும் மே 30-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மூடப்பட உள்ளது. 31-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க