• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பரம்பிக்குளம், பவானிசாகர் அணைகளின் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் பதவிகளுக்கான தேர்தல்

March 16, 2022 தண்டோரா குழு

பரம்பிக்குளம், பவானிசாகர் அணைகளின் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

பரம்பிக்குளம் அணைக்கோட்டம் மற்றும் பவானிசாகர் அணைக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை மாவட்ட நீர்நிலைகளில் நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. புனரமைக்கப்பட்ட நீர்நிலைகளின் ஆயக்கட்டு பகுதிகளுக்கு நீரினை பயன்படுத்துவோர் சங்கம் அமைக்க இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட தகவல், படிவம் 9 இன் மூலமாக மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில்,நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,இந்த தேர்தலுக்கான வேட்புமனு படிவங்கள், கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி சப் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

மார்ச் 16ம் தேதி, காலை 9 முதல் மாலை 4 மணி வரை தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிக்கு வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமணுக்கள் பெறப்படும். மார்ச் 21ம் தேதி, காலை 9 முதல், பிற்பகல் 2 மணி வரை வேட்புமனுக்களை ஆய்வு செய்து, செயல்திறனுள்ள வேட்புமனுக்களின் பட்டியலை வெளியிடுதல்.

பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறுதல், மாலை 4 மணி முதல் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதியாக்குதல் மற்றும் தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்தல், மார்ச் 27ம் தேதி காலை 7 முதல் பிற்பகல் 2 மணி வரை தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிக்கு வாக்குப்பதிவு. மாலை 4 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க