March 1, 2021
தண்டோரா குழு
கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் கராத்தே மையத்தை சேர்ந்த பயிற்சி முடித்த கராத்தே வீரர்,வீராங்கனைகளுக்கு கருப்பு பட்டையம் வழங்கப்பட்டது.
கோவையில் கராத்தே பயிற்சியை நிறைவு செய்த பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கருப்பு பட்டையம் வழங்கும் விழா மற்றும் தற்காப்பு கலைகளை மாணவிகள் பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சின்னவேடம்பட்டி பகுதியில் நடைபெற்றது.மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக நடைபெற்ற இதில் கராத்தே பயிற்சியை நிறைவு செய்த மாணவ,மாணவிகளுக்கு கருப்பு பட்டையம் வழங்கி தேசிய இயக்குனர் தியாகு கவுரவித்தார்.
கிளை பயிற்சியாளர்கள் சிவ முருகன்,ஹேமந்த்,சிவலிங்க பெருமாள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில் ,கிருஷ்ண நந்தன், பிரபாகரன்,பிரியங்கா, கமலேஷ் குமார்,நேத்ரா, சரவணன்,அபிஷேக், மனோஜ் குமார், கோகன், ஆகியோருக்கு கருப்பு பட்டையம் வழங்கப்பட்டது.
இதில் பிளேக் பெல்ட் வாங்கிய மாணவிகள் பேசுகையில்,
சிறு வயது முதல் கராத்தே கற்று வருவதாகவும்,கராத்தே கற்று கொள்வதால் தன்னம்பிக்கை வளர்வதோடு கல்வி கற்பதிலும் கூடுதல் கவனம் செலுத்த முடிவதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் , பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில்,தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்வதன் அவசியம், குறித்தும், நெருக்கடியான சமயத்தில் அதன் பயன்பாடு மற்றும் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.