• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பயிர்க்காப்பீடு, உழவர் கடன் அட்டை பெற சிறப்பு முகாம்கள் ஆட்சியர் அறிவிப்பு

April 23, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் வேளாண்மை மற்றும் சகோதர துறைகளின் மூலம் வரும் 24-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் \”சிறப்பு விவசாயிகளின் பங்களிப்பே எமது முன்னுரிமை\” என்கிற முகாம்கள் நடைபெறவுள்ளன.

ஒரு வாரகாலத்திற்கு நடைபெறும் இச்சிறப்பு முகாம்களில் வேளாண்மை துறையினால் நடத்தப்படும் முக்கிய திட்டங்களான பயிர்க்காப்பீடு,உழவர் கடன் அட்டை, மண் மாதிரிகள் சேகரித்தல் மற்றும் நுண்ணீர் பாசனத் திட்டம் குறித்த விரிவான விளக்க காட்சிகள் கருத்தரங்குகள் மற்றும் செயல் விளக்கங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன. இம்முகாம்களில் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களான விவசாயிகள் காப்பீடு செய்திடும் வழிமுறைகள், காப்பீடு பெற தகுதிகள், இழப்பீட்டிற்கான காரணிகள், இழப்பீடு கணக்கிடும் முறை, காப்பீடு விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிய கூடிய வழிவகைகள், புகார்கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவற்றிற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

எனவே கிராம பஞ்சாயத்து அளவில் நடைபெறக்கூடிய இம்முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க