• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பயிரினை காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெற கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

July 26, 2017 தண்டோரா குழு

பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில், விண்ணப்பித்து, தங்கள் பயிரினை காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர், விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கார், குறுவை, சொர்ணவாரி பருவ நெல், சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, பாசிப்பயிறு மற்றும் பருத்தி ஆகிய வேளாண் பயிர்களும், மஞ்சள், வாழை, மரவள்ளி மற்றும் வெங்காயம் ஆகிய தோட்டக்கலைப் பயிர்களும் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள தகுதியானவை.

தமிழக அரசினால் அங்கிகரிக்கப்பட்ட, கீழ்க்கண்ட பயிர் சாகுபடி செலவினத் தொகையில், 2 முதல் 5 சதவித தொகையை மட்டும் பிரிமியமாக செலுத்தினால் போதும். ஒப்புதல் அளிக்கப்பட்ட மீதமுள்ள பிரிமியத் தொகையினை அரசே ஏற்றுக்கொள்ளும்.

அந்த வகையில், பருத்தி, மஞ்சள், மரவள்ளி, வாழை மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு 5 சதவிதமும், இதர அறிவிக்கப் பட்ட பயிர்களுக்கு 2 சதவிதமும் பிரிமியம் தொகையாக செலுத்தினால் போதுமானது.

இத்திட்டத்தின் கீழ் மூன்று விதமான இழப்புகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. போதுமான நீர் வரத்து இல்லாததால், தவறிய விதைப்பு, விதைத்த பயிர்களில், இயற்கை இன்னல்களால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப்பின், இரு வார காலத்துக்குள், புயல் மற்றும் அதி மழையால் களத்தில் ஏற்படும் இழப்பு என மூன்று விதமான இழப்புகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

சோளப் பயிருக்கான இழப்பீடு குறுவட்ட அளவில் ஏற்பட்ட பாதிப்பினைப் பொறுத்தும், இதர பயிர்களுக்கான இழப்பீடு வருவாய் கிராம அளவில் ஏற்பட்ட பாதிப்பினைப் பொறுத்தும், காப்பீட்டு நிறுவனத்தால் தீர்மானிக்கப்பட்டு, இழப்பீடு வழங்கப்படும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தொடக்கக்கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகளுக்கு இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடன் எதுவும் பெறாத விவசாயிகள் தன் விருப்பத்தின் பேரில், வங்கிகளுக்குச் சென்று, விண்ணப்பித்து, உரிய பிரிமியம் தொகையை செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

“கோவை மாவட்டத்திற்கு, ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டு நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது , விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தினையோ, வேளாண் விரிவாக்க மையங்களையோ தொடர்பு கொண்டு, இத்திட்டம் குறித்த விளக்கங்கள் மற்றும் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள உதவி பெறலாம்” என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க