• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பயணிகள் ரயில் கட்டண உயர்விற்கு பி.ஆர்.நடராஜன் எம்பி கண்டனம்

November 10, 2021 தண்டோரா குழு

கோவையில் இருந்து பழனிவரை செல்லும் பயணிகள் ரயில் கட்டண உயர்விற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாவட்டம் கல்விநிலையங்கள், சிறுகுறு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக தலைநகராக உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவை மாவட்டத்திற்குள் வருவதும், செல்வதுமாக உள்ளனர். இதன்காரணமாக அதிகப்படியான வருவாயை நமது கோவை ரயில்வே துறை ஈட்டி வருகிறது.

இரண்டு முறை கோவை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களின் ஆதரவை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டதால் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு வசதிகள் கோவை ரயில்நிலையம் மற்றும் வடகோவை ரயில்நிலையத்திற்கு செய்து தரப்பட்டது. மேலும் எனது தொடர் முயற்சியின் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் கோவையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இந்த சேவை நீட்டிக்கப்பட்டது.

மேலும் நமது கோவை ரயில் நிலையத்தை ஆதார் அந்தஸ்த்து பெற முடிந்தது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் அனைத்து பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என கடந்த மாதம் ரயில்வேதுறைக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

இந்த கோரிக்கையை ஏற்று தற்போது அடுத்தடுத்த ரயில்கள் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. தற்போது கோவை – பழனிக்கு பயணிகள் இரயிலை சேவை துவக்கப்பட்டுள்ளது.ரயில்வேதுறையின் இந்த நடவடிக்கையை கோவை மக்களின் சார்பில் வரவேற்கிறேன். அதேநேரத்தில் பயண கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஏற்கனவே கொரோன பதிப்பால் வேலையின்மை, வருவாய் இழப்பு போன்ற துயரத்தில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும்.

கோவை முதல் பழனி வரையில் செல்லும் ரயில் சேவைக்கு பயண கட்டணத்தை 10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தி உள்ளது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சுமையேற்றும் நடவடிக்கையாகும். உடனடியாக இந்த கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்று முந்தைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும். மேலும், அனைத்து ரயில் சேவைகளையும் விரைந்து இயக்கிட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க