• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பயணசீட்டு பரிசோதனையில் சேலம் கோட்ட அதிகாரிகள் சாதனை

April 4, 2017 தண்டோரா குழு

பயணச்சீட்டு பரிசோதனையில் ஒரே நாளில் அதிக தொகை வசூலித்து சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகள் சாதனை புரிந்துள்ளனர்.

பயணச்சீட்டு இல்லாமல் ரயில்களில் பயணம் செய்வதை குறைக்கும் வகையிலும் பயணிகளிடையே பயணச்சீட்டு வாங்கும் பழக்கத்தை மேம்படுத்தவும், சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு தொடர்ந்து பல்வேறு நாட்களில் திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றது.

அதன் படி கடந்த 2ம் தேதியன்று சேலம் கோட்ட வணிகவியல் பிரிவின் 231 பயணச்சீட்டு பரிசோதகர்கள் சேலம் கோட்ட வணிக மேலாளர் கே.மாது தலைமையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், போத்தனூர், கரூர் உள்ளிட்ட சேலம் கோட்டத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 755 பேர்களிடமும், மற்றும் சரியான தொகை செலுத்தாமல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சரக்குகளை எடுத்துச் சென்ற 11 பேர்களிடமும், மொத்தம் 3,37,595 ரூபாய் பயணச்சீட்டு தொகை, சரக்குக்கட்டணம், மற்றும் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது.

இத்தொகை சேலம் கோட்டம் துவக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை ஒரு நாளில் வசூலிக்கப்பட்ட அதிகபட்சத் தொகையாகும். இதற்கு முன்னர், 05.03.2017 அன்று நடத்தப்பட்ட திடீர் பயணச்சீட்டு
பரிசோதனையின் போது வசூலிக்கப்பட்ட 2,47,025 ரூபாய்தான் அதிகபட்ச தொகையாக இருந்தது.

இதில், சேலம் பயணச்சீட்டு பரிசோதனைக்குழுவின் பறக்கும் படையை சேர்ந்த எம். மனோ செல்வம் மற்றவர்களை விட அதிகமாக அதாவது 35,780 ரூபாய் பயணச்சீட்டு தொகை மற்றும் அபராதத் தொகையாக வசூலித்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

மேலும், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் மற்றும் அவர் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா பாராட்டியதுடன், தொடர்ந்து இத்தகு திடீர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க