October 12, 2018
தண்டோரா குழு
பப்ஜி விளையாட அனுமதிக்காததால் ஆத்திரத்தில் குடும்பத்தையே கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இணையதள விளையாட்டான “பப்ஜி” விளையாட்டை உலக அளவில் பலரும் விளையாடி வருகின்றனர். பலர் இவ்விளையாட்டிற்கு அடிமையாகியும் உள்ளனர். இதற்கிடையில், டெல்லியில் கல்லூரியில் படித்து வரும் மாணவன் சுராஜ்(19) இவர் “பப்ஜி” விளையாட்டிற்கு மிகவும் அடிமையானவராக இருந்துள்ளார். விளையாடுவதற்காகவே நண்பர்களுடன் சேர்ந்து வாடகைக்கு வீடு ஒன்றையும் எடுத்துள்ளான். கல்லூரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு வாடகை எடுத்த விடில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நண்பர்களுடன் இணைத்து பப்ஜி விளையாடி வந்துள்ளார்.
இதனையறிந்த சுராஜின் சகோதரி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் சுராஜை கண்டித்து கல்லூரிக்கு செல்லும்மாறு வற்புறுத்தியுள்ளனா்.இதனால் கல்லூரி முடிந்து விட்டுக்கு வந்த சுராஜ் வழக்கத்திற்கு மாறாக வீட்டில் உள்ளவா்களின் புகைப்படங்களை எடுத்து கொண்டு இருந்துள்ளர். இதனை பெரிதும் கண்டுகொள்ளாமல் அனைவரும் உறங்க சென்றுள்ளனர். அதிகாலை 3 மணியளவில் தனது பெற்றோரின் அறைக்கு சென்ற சுராஜ் தன்னை பப்ஜி விளையாட விடாதா ஆத்திரத்தில் தாய் தந்தையை சகோதரி என மூன்று பேரையும் கொலை செய்துள்ளான். பின்னர் வீட்டில் உள்ள பொருட்களை களைத்து விட்டு கொள்ளை நடந்தது போல் சூழலை அமைத்துவிட்டு தப்பித்துள்ளான்.
இது குறித்து அக்கம் பக்கத்தினா் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.மேலும் வீடு எடுத்து தங்கிய நண்பா்கள் 10 பேரிடமும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.