September 17, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது
“கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நாட்டு பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவைகளால் பொது சுகாதாரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகள் வளர்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
எனவே. பன்றி வளர்ப்பவர்கள் உடனடியாக பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும், மற்றும் பொது சுகாதாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையீல் சுற்றித்திரியும் பன்றிகளை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்துமாறு பன்றிகளை வளர்க்கும் உரிமையாளர்களைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தவறினால் பன்றி உரிமையாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.