• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. கட்டுக்கோப்பாக இருக்கும் – மா.பா பாண்டியராஜன்

February 11, 2017 தண்டோரா குழு

தமிழக முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. கட்டுக்கோப்பாக இருக்கும் பிளவு ஏற்படாது என பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மா.பா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க அவரது இல்லத்திற்கு சனிக்கிழமை நேரில் சென்று மா.பா. பாண்டியராஜன் தனது ஆதரவை தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்

“அ.தி.மு.க.வில் என்றுமே பிளவு ஏற்படாது. அ.தி.மு.க.வில் பிளவினை எதிர்பார்க்கும் தி.மு.க.வுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும். முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. கட்டுக்கோப்பாக இருக்கும். பிளவு ஏற்படக்கூடாது என்பது தான் அனைவரின் விருப்பம்” என்றார்.

அதே போல் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கும் முன் வெள்ளிக்கிழமை அவரது டிவிட்டர் பக்கத்தில்
“வாக்காளர்களின் ஒட்டு மொத்த குரலுக்கு மதிப்பளித்து ஜெயலலிதாவின் கொள்கைகள் மற்றும் கட்சியை வலுப்படுத்தும் விதமாக முடிவெடுப்பேன் “ என பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்

“ நாம் நடத்தும் தர்மயுத்தத்திற்கு வலுசேர்க்க வகையில் பள்ளிகல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் வந்து நம்மோடு இணைந்துள்ளார். வி.கே.சசிகலாவை நிராகரிக்க வேண்டும் என்பது மக்கள் ,இளைஞர்கள், மாணவர்களின் ஒரு மித்த கருத்தாக உள்ளது. அ.தி.மு.க.விலிருந்து அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் நம் பக்கம் வருவார்கள். இதற்கு அச்சாரம் சேர்க்கும் வகையில் பாண்டியராஜனின் வருகை உள்ளது” என்றார்.

மேலும் படிக்க