May 15, 2018
தண்டோரா குழு
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணி அளவில் வெளியாகும் என்று தேர்வுத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்றன.இதில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு http://www.tnresults.nic.in,http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும்,மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களுக்கு மதிபெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை உடனடியாக அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.