• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னிமடை அருகே ரூ.134 கோடி செலவில் 73 லட்சம் மதிப்பில் மாஸ்டர் ஸ்டோரேஜ் குடிநீர் தொட்டி கட்டட பணி குறித்து ஆய்வு

April 10, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியின் விரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு தேவையான குடிநீரை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பில்லூர்-3ம் குடிநீர் திட்டம் ரூ.740 கோடி செலவில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டப் பணிகளானது நீரேற்று நிலையம், குழாய் அமைக்கும் பணிகள், சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப்பாதை அமைத்தல் என 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மாநகராட்சிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி. குடிநீர் கிடைக்கும். இந்த திட்டத்தை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் சில மாதங்களில் கொண்டு வர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் ரூ.134 கோடி செலவில் தலா 73 லட்சம் கொள்ளவு கொண்ட மாஸ்டர் ஸ்டோரேஜ் குடிநீர் தொட்டி பன்னிமடை அருகே கட்டப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டி கட்டுமான பணியை கூடுதல் தலைமை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க