• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னாட்டு அரிமா சங்கம் 324 C மாவட்டத்தின் கையேடு வெளியீட்டு விழா

December 20, 2021 தண்டோரா குழு

பன்னாட்டு அரிமா சங்கம் 324 C மாவட்டத்தின் எம் ஜே எப் பட்டம், விருதுகள் மற்றும்
கையேடு வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.

அரிமா சங்கம் 324 C மாவட்டம் சார்பாக பல்வேறு சமுதாய சேவை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய 120 அரிமா சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அவர்கள் குறித்தான தகவல்கள் குறித்த கையேடு வெளியீட்டு விழா எம் ஜே எப் பட்டம் மற்றும் விருதுகள் வழங்கும் விழா கோவை ஆவராம்பாளையம் பகுதியில் உள்ள கோ இண்டியா அரங்கில் நடைபெற்றது.

அரிமா சங்கம் 324 C மாவட்ட கையேடு குழு தலைவர் வெங்கட கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு அழைப்பாளராக 324 C மாவட்ட ஆளுநர் நடராஜன் கலந்து கொண்டார்.கவுரவ விருந்தினர்களாக முதல் பெண்மணி கலாமணி நடராஜன், இந்திய மருத்துவர்கள் சங்க தமிழக தலைவர் மற்றும் முன்னால் ஆளுநர் டாக்டர் பழனிசாமி,சாரதா மணி,ஒருங்கிணைந்த கூட்டு மாவட்ட தலைவர் கருணாநிதி,முன்னால் ஆளுநர்கள் சண்முகம், காளிச்சாமி, முதல் துணை நிலை ஆளுநர் ராம்குமார்,இரண்டாம் துணை நிலை ஆளுநர் ஜெயசேகரன் ,
ஜி எல் டி ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் மாவட்ட செய்தி தொடர்பாளரும் நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவரும் ஆன செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில்,நேரு நகர் அரிமா சங்க முன்னால் தலைவர் பாஸ்கரன் மற்றும் பொருளாளர் ஹரீஸ் பாஸ்கர்,மண்டலத் தலைவர் சண்முகம்
உள்ளிட்ட பலருக்கு எம் ஜே எப் சிறப்பு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட கையேடு வெளியிடப்பட்டது.பின்னர் கையேடு வெளியிட விளம்பரங்கள் செய்து உதவி செய்தவர்கள் நட்சத்திர விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் 324 C அரிமா சங்கத்தை சேர்ந்த பல்வேறு நிலை இந்நாள்,முன்னால் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க