July 15, 2021
தண்டோரா குழு
கர்ம வீரர் காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு வடகோவையில் உள்ள அவரது சிலைக்கு பனங்காட்டு மக்கள் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காமராஜரின் 119வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பெருந்தலைவர் நற்பணி மன்றம் சார்பில் சிறப்பாக கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டும் வடகோவையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பனங்காட்டு மக்கள் கழகம் சார்பில் வழக்கறிஞர் விஜயராகவன் தலைமையில் ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது காமராஜரை பெருமைபடுத்தும் வகையில் முழக்கங்கள் இட்டு அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அவ்வமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.