May 28, 2018
தண்டோரா குழு
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஹரிபிரபாகரன் கட்சியிலிருந்து திடீர் நீக்கம் செய்யப்பட்டார்.
அதிமுகவின் காஞ்சி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்தவர் ஹரிபிரபாகரன் தூத்துக்குடியில் துணை முதல்வர் ஓபிஎஸ் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்த்தித்தார். அப்போது, பத்திரிக்கையார்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இது குறித்து ஹரிபிரபாகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்துள்ளார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஹரிபிரபாகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.