March 16, 2018
தண்டோரா குழு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது. 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 மாணவர்கள், 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 மாணவிகள், 36 ஆயிரத்து 649 தனித்தேர்வர்கள் என 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க 6 ஆயிரத்து 900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல் காப்பி அடித்தல், உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.