• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பதவியை ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர் பிரசந்தா

May 24, 2017 தண்டோரா குழு

நேபாளம் நாட்டின் பிரதமர் பிரசந்தா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.நேபாளத்தில் இடதுசாரி கட்சித் தலைவரான பிரசந்தாவும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷெர் பகதுரும் சேர்ந்து, சுழற்சி முறையில் பிரதமர் பதவியை வகிக்க, ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர்.

அதன்படி 10 மாதங்களுக்கு முன்பாக, அப்போதைய பிரதமர் ஒளி பதவி விலகியதை தொடர்ந்து, பிரசந்தா பதவியேற்றார்.

இதைத்தொடர்ந்து கடந்த 10 மாதங்களாக பிரதமர் பதவி வகித்து வந்த பிரசந்தா இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா நிகழ்வு, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.அவரைத்தொடர்ந்து, நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷெர் பகதுர் தியூபா புதிய பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.

2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரையிலும் ஷெர் பகதுர் பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க