• Download mobile app
02 Oct 2025, ThursdayEdition - 3522
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பண்டிகை காலத்தையொட்டி ‘அதிகமாக கொடுத்து அதிகமாக பெறுங்கள்’ என்னும் புதிய விளம்பரத்தை இன்டஸ்இன்ட் வங்கி வெளியிட்டது

October 2, 2025 தண்டோரா குழு

பண்டிகை காலத்தையொட்டி இன்டஸ்இன்ட் வங்கி ‘அதிகமாக கொடுத்து அதிகமாக பெறுங்கள்’என்னும் புதிய விளம்பரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது தாராள மனப்பான்மை, நிதி சுதந்திரம் மற்றும் கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.‘பெரிய கணக்கு, பெரிய மனது’ அதாவது உங்கள் கணக்கு பெரியதாக இருக்கும்போது, அதிகமாகக் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு விருப்பமானவர்களின் கனவுகளை நிறைவேற்றலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த விளம்பரம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் கனவுகளை நனவாக்கி அவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கிறது.

அதிகமாக கொடுத்து அதிகமாக பெறுங்கள் என்பதை வலியுறுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரத்தின் கதையானது, ஒரு பேக்கரி தொழிலாளி மற்றும் அவரது மகனைப் பற்றியது. தந்தையின் அமைதியான திறமை அவரது வாழ்நாள் கனவை நிஜமாக மாற்றுகிறது. இன்டஸ்இன்ட் வங்கியில் கடன் உதவி பெற்ற மகன், தந்தையின் சொந்த பேக்கரி கனவை நனவாக்கி தனது தந்தையை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

இந்த உணர்ச்சிபூர்வமான விளம்பரம் சேமிப்பு அதிகரிக்கும் போது மற்றவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கான உங்கள் திறனும் வளரும் என்பதை வலியுறுத்துகிறது.மேலும் இந்த விளம்பரம் இன்டஸ்இன்ட் வங்கியின் பண்டிகை கால சலுகைகள் குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு கூறுகிறது. அத்துடன் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் நிதி தீர்வுகளுடன் அவர்களை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு உள்ளது. பண்டிகை கால சலுகையாக வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், சொத்து அடமானக் கடன் என அனைத்திற்கும் செயலாக்கக் கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.

மேலும் விஜய் சேல்ஸ், கோயிபிபோ, ஜொமாடோ, பிக்பாஸ்கெட் மற்றும் இது போன்ற 15க்கும் மேற்பட்ட சிறந்த பிராண்டுகளுக்கு பிரத்யேக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ஏராளமான சலுகைகளையும் இவ்வங்கி வழங்குகிறது.இந்த விளம்பரம் பல்வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள போதிலும் வங்கியின் சமூக ஊடக தளங்களில், அதாவது இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், லிங்டுஇன் மற்றும் யூடியூப்பிலும் வெளியிடப்பட்டுள்ளன. இவை இவ்வங்கியின் உடனடி கடன்கள், சேமிப்புக் கணக்கு, வணிகத்திற்கான இன்டி செயலி மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட பில்
கொடுப்பனவுகள் குறித்தும் தெரிவிக்கிறது.

மேலும் இவ்வங்கி அன்றாட வங்கி அனுபவங்களை எவ்வாறு வளப்படுத்துகிறது என்பதையும் கூறுகிறது.இதன் பண்டிகை கால பிரச்சாரமான ‘#அதிகமாக கொடுத்து அதிகமாக பெறுங்கள்’, நீங்கள் அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கும்போது, அதற்கு ஈடாக நீங்கள் அதிகமாகப் பெறுவீர்கள் என்பதையும் வலியுறுத்துகிறது.

மேலும் படிக்க