• Download mobile app
07 Dec 2025, SundayEdition - 3588
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பணம் பத்தும் (இல்லை) 70ம் செய்யும்.

March 22, 2016 வெங்கி சதீஷ்

கடந்த ஐ.பி.எல் போட்டிகளின் பொது மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய ஆட்டங்களில் ஒருவரை அதிகமாகக் காட்டினர். அவர் வேறுயாரும் இல்லை. மும்பை அணி உரிமையாளரும் உலக பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆனந்த் அம்பானிதான். இவர் அப்பொழுது பார்ப்பதற்கு மிகவும் குண்டாக இருந்தார்.

சுமார் 140 கிலோ எடையுடன் குண்டாக இருந்தது பலரது விமர்ச்சனத்திற்கும் ஆளாக நேர்ந்தது. இதையடுத்து அவர் தனது உடல் எடையைக் குறைக்க இவர் பல்வேறு வழிகளைக் கடைப்பிடித்தாலும் மரத்தான் ஓட்டத்திற்கான பயிற்சியை தவறாது மேற்கொண்டுவந்தார். மேலும் அவரது உடல் எடையைக் குறைக்க பிரத்யோகமாக ஒரு அமெரிக்க நிபுணரை வரவழைத்துள்ளனர்.

இதன் பலனாக அவர் இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகளுக்குள் தனது எடையைக் குறைத்துக்காட்டியுள்ளார். கடந்த வாரம் கோவிலுக்கு சென்ற அவரை யாருக்கும் அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்துள்ளார். தற்போது அவர் வெறும் 70 கிலோ மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வந்த செய்திகளில் அவர் தவறாமல் மரத்தான் பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும், இதனால் தான் அவர் இந்தளவிற்கு எடையைக் குறைக்க முடிந்தது எனத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பணம் பத்தும் இல்லை இல்லை எழுபதும் செய்யும் என நிருபிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க