January 31, 2018
தண்டோரா குழு
உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
உலக பணக்கார நாடுகள் தொடா்பான “நியூ வோ்ல்ட் வெல்த்” அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் புள்ளி விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 6வது இடம் கிடைத்துள்ளது.
மேலும், அமெரிக்கா 64,58,400 கோடி டாலர் மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் சீனா (24,80,300 கோடி டாலர்) இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஜப்பான் (19,52,200 கோடி டாலர்), நான்காவது இடத்தில் இங்கிலாந்து (9,91,900 கோடி டாலர்), ஐந்தாவது இடத்தில் ஜெர்மனி (9,66,000 கோடி டாலர்) மற்றும் ஆறாவது இடத்தில் இந்தியா (8,23,000 கோடி டாலர்) இருக்கிறது.
மேலும்,கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவில் 6,58,400 கோடி டாலர் இருந்ததாகவும்,2017 ம் ஆண்டு 25 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.