• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட் உங்க நேர்மை எனக்கு ரொம்போ பிடிச்சிருக்கு மாமா.

April 30, 2016 தண்டோரா குழு

பட் உங்க நேர்மை எனக்கு ரொம்போ பிடிச்சிருக்கு மாமா.

இந்தச் சினிமா வசனம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் நாம் அறியாதது இன்று உலக நேர்மை தினம் என்பது தான்.

பொதுவாக ஏப்ரல் மாதம் என்றாலே முட்டாள்கள் தினம் தான் நம் நினைவுக்கு வரும். முட்டாள்கள் தினமாக ஆரம்பமாகும் ஏப்ரல் மாதம், முடிவு பெறுவது நேர்மை தினமாக. ஆம், ஏப்ரல் 30 உலக நேர்மை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

எங்குப் பார்த்தாலும் போலிகள், ஊழல்கள், மோசடிகள், பெருகிவிட்டது என்று குறை கூறிக்கொள்ளும் நாம், இந்த நேர்மை நாளை அனுசரிப்பது மூலமாக இவற்றிற்கு ஒரு வேகக் கட்டுப்பாடு போட முற்படலாம்.

இந்தத் தினத்திற்கு காரணமானவர் எழுத்தாளரும், அமெரிக்காவின் மேரிலேன்ட் மாகாணத்து ஆளுநருமான ஹிர்ஷ் கோல்ட்பெர்க் தான். “The book of Lies” என்ற புத்தகம் எழுத இவர் செய்த ஆய்வு இவரை இதற்குத் தூண்டியது.

இந்தப் புத்தகம் எழுத இவர் சுமார் நான்கு வருடங்கள் ஆய்வு மேற்கொண்டார். ஒரு நாளைக்கு சுமார் 200 முறை மனிதர்கள் சாதாரணமாக பொய்களை உதிர்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் பொய் என்பது வாழ்வியல் முறை என்றாகிவிடும். நேர்மை என்ற ஒரு கோட்பாடு அழிந்துவிடும் என்று அவர் கருதினார்.

நேர்மை என்ற கோட்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால், வருடத்தில் ஒரு நாளாவது நேர்மையை நினைவு கூறுவது அவசியம் என்று அவர் கருதினார். இதனால் முட்டாள்கள் தினம் அனுசரிக்கப்படும் ஏப்ரல் மாதத்தின் கடைசி நாள் நேர்மை தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என விரும்பினார்.

இந்த நாளை அனுசரிக்கப் பல ஆலோசனைகளும் கோல்ட்பெர்க் தருகிறார். உலகின் மிக மோசமான ஊழல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நேர்மை பற்றி உலக புகழ் பெற்ற எழுத்தாளர்கள் என்ன கூறினார்கள் என்று அவரவர் வீட்டில், தெருவில், அலுவலகத்தில் பகிர்ந்துகொள்வது,

இன்று ஒரு நாள் எக்காரணம் கொண்டும் பொய் பேசாமல் இருப்பேன் என்று தனக்கத் தானே உறுதி மொழி எடுத்துக் கொள்வது என்று நீண்டு கொண்டே போகிறது அந்தப்பட்டியல்.

அதே நேரம் நேர்மை பற்றி உலகப் பொதுமறையான திருக்குறள் என்ன சொல்வதென்றால்,

கேடும் பெருக்கமும் இல் அல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி

இதன் அர்த்தம் என்னவென்றால்:

பொருட்செல்வத்தைக் காட்டிலும், நேர்மை தான் சான்றோரின் விலை உயர்ந்த அணிகலன்.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

மற்றவரை வருத்தப்படுதாத எந்தச் சொல்லும் வாய்மையாகக் கருதப்படும்.

இந்த நேர்மையை நம் எல்லோரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் படிக்க