• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்டம் விட்டு விளையாடிய பிரதமர் மோடி

May 30, 2018 தண்டோரா குழு'

அரசு பயணமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுடன் பட்டம் விட்டு விளையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பயணமாக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

இதில் முதலில் இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஜோகோ உற்சாக வரவேற்பளித்தார்.இதனையடுத்து நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு,அறிவியல்,தொழில்நுட்பம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தீவிரவாத ஒழிப்பு உட்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.அதைத் தொடர்ந்து இன்று காலை போரில் வீரமரணமடைந்த ராணுவவீரர்களுக்கு மலர்வளையம் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி தீவிரவாதத்தை ஒழிக்க இந்தோனேசியவுக்கு துணையாக இந்தியா இருக்கும் என்று தெரிவித்தார்.இதனையடுத்து ஜகர்த்தாவில் நடைபெற்ற பட்டம் விடும் கண்காட்சிக்கு பிரதமர் மோடி ஜோகோ சென்றனர்.அப்போது அங்கு ஜோகோவுடன் இணைந்து பிரதமர் மோடியும் பட்டம் விட்டு விளையாடினார்.

மேலும் படிக்க