• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்ஜெட் கூட்டத் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் – எதிர்கட்சிகள்

January 6, 2017 தண்டோரா குழு

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை ஒத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை உத்தரப் பிரதேசம், உத்தரா கண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு வியாழக்கிழமை சென்று மனு அளித்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் மத்திய பட்ஜெட்டை ஒத்தி வைக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசுகையில், “வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் தேர்தல் நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்காது. எனவே, தேர்தல் முடியும் நாளான மார்ச் 8-ம் தேதிக்குப் பிறகு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம்” என்றார்.

மேலும் படிக்க