June 22, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன்28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்துகிறது.இதற்காக tnea.ac.in என்ற இணையதளத்தில் 1.10 லட்சம் பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.பி.இ படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 6 ஆம் தேதி தொடங்குகிறது.மேலும்,தரவரிசை குறித்த விவரங்கள் அன்றே மாணவர்களின் செல்பேசி,மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்படும்.