March 5, 2018
தண்டோரா குழு
படித்தவர்களும் விவசாய தொழிலுக்கு வர வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கட்சியில் புதிதாக இணைபவர்கள் மத்தியில் பேசிய கமல்,
நம்மிடம் இருந்தே அனைத்து மாற்றத்தையும் தொடங்க வேண்டும் எங்களை பார்த்து நீங்கள் தலைவா என்று கூற வேண்டாம், உங்களை பார்த்து தலைவா என நான் கூறவேண்டும்.
கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்.ஏழைகளுக்கு எளிதில் கல்வி கிடைக்கும் வகையில்இருக்க வேண்டும் அமைச்சர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.
மேலும், தவறுகள் எல்லா அரசிலும் நிகழும், நீங்கள் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது என்று கூறினார்.