March 6, 2018
தண்டோரா குழு
படிக்கும் காலத்தில் அரசியலுக்கு வரவேண்டாம் ஆனால் அரசியலை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைத்தார்.
அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த்,
ஒற்றுமை, ஒழுக்கம்,கட்டுப்பாடு இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை கூறினார். தமிழகத்தில் நல்ல அரசியல் மாற்றம் கொண்டு வர வேண்டும், ஆனால் அது கடினமான வேலை.தமிழில் பேசினால் மட்டும் தமிழ் வளராது,தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் என்றார்.மேலும், படிக்கும் காலத்தில் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் ஆனால் அரசியலை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் என்று பேசினார்.