• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பசு நம்முடைய தாயிற்கு இணையானவள் – சத்குரு

January 15, 2022 தண்டோரா குழு

“ஈன்றெடுத்த தாயிற்கு பிறகு நாம் பசுவின் பால் குடித்து வளர்வதால் பசு நம்முடைய தாயிற்கு இணையானவள்” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறினார்.

மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தி:

நம்மை சுற்றி பல ஜீவன்கள் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. அதிலும் குறிப்பாக, நாம் விவசாய கலாச்சாரமாக வளர்ந்து வந்ததால் மாட்டிற்கும் நமக்கும் ஒரு ஆழமான தொடர்பு உள்ளது.

வயலில் மாடு நம்முடன் இணைந்து வேலை செய்கிறது. நாம் குடிக்கும் பாலும் அதனிடம் இருந்து தான் வருகிறது. பசு நம் தாயிற்கு பிறகு ஒரு முக்கிய உயிராக இருக்கிறாள். பசு நம் தாயிற்கு இணையானவள். அதனால் தான் மாட்டு பொங்கலை நாம் பெரிய விழாவாக கொண்டாடுகிறோம்.

பொங்கல் பண்டிகை – நாம் உருவாகக் காரணமான மண், விலங்குகள், காற்று, நீர், மக்கள் என அனைத்தையும் கொண்டாடுவதற்கான ஒரு விழா. கொண்டாடிக் களித்திடுங்கள்!

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

மேலும் படிக்க