• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பசுமையான கோவையை உருவாக்க கானகம் அமைப்பு முடிவு – பல லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகள் நட திட்டம்

May 24, 2023 தண்டோரா குழு

கோவையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனி வீடுகளையும், அடுக்குமாடி குடியிருப்புகளையம் மற்றும் வணிக வளாகங்களையும் திறம்பட கட்டி கோவை மக்கள் மனதில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துள்ள பிரபல கட்டுமான நிறுவனமாகிய டேனி ஷெல்டர்ஸ் நிறுவனம் புதிதாக சேயோன் அறக்கட்டளை என்ற ஒன்றை துவக்கி அதில் கானகம் என்ற புதிய அமைப்பை அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி மற்றும் டேனி ஷெல்ட்டர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சிவராமன் கந்தசாமி ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த அறக்கட்டளையின் நோக்கம் கோவை மாநகரம் முழுவதும் பசுமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நகரம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டு உள்ளார்கள்.அதன் ஒரு பகுதியாக முதல் கட்டமாக 25000 மரக்கன்றுகள் நட இருக்கிறார்கள் .இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்களும் பயன் பெற்று மரக்கன்றுகளை உங்கள் இல்லத்திலும் உங்கள் தோட்டத்திலும் நடவு செய்து வீட்டுக்கும் நாட்டுக்கும் மாசற்ற ஆக்சிசனை நாம் பெறுவோம் கோவை பசுமையில் செழிக்க நம் கரம் கோர்ப்போம் என்ற அடிப்படையில் இந்த புதிய கிளையை திறந்து வைத்து சேயோன் அறக்கட்டளையின் தலைவர் சிவராமன் கந்தசாமி கூறினார்கள்.

இந்த திறப்பு விழாவில் தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளார்,சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களும் இந்த புதிய அறக்கட்டளையை திறந்து வைத்தனர்.முதல் மரக்கன்றை சுவாமிகளின் திருக்கரங்களால் சிவராமன் கந்தசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க